ஈஸ்டர் தாக்குதலுக்கு காரணமான சூத்திரதாரிகளுக்கும் உதவியவர்களுக்கும் தூக்குத்தண்டனையை பெற்றுக்கொடுப்பேன்  - சஜித் 

Published By: Digital Desk 2

01 Mar, 2021 | 11:57 AM
image

( ஆர்.யசி ) 

ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புபட்ட உண்மையான குற்றவாளிகளை காப்பாற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுக்கின்றதா என்ற சந்தேகம் எழுவதாகவும், இந்த அறிக்கை முற்றுமுழுதாக அரசியல் பழிவாங்கல் நோக்கத்தில் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். 

தாம் ஆட்சிக்கு வந்தவுடன் ஈஸ்டர் தாக்குதல் குற்றவாளிகள் மற்றும் அவர்களுக்கு அரசியல் ரீதியில் உதவிய அனைவருக்கும் தூக்குத்தண்டனையை பெற்றுக்கொடுப்பதாகவும் அவர் கூறினார்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்,

தற்போதைய அரசாங்கம் எதிர்கட்சியாக இருந்த வேளையில் ஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னால் இருந்து இயங்கியவர்களை தண்டிப்பதாக கூறினர். 

ஆனால் இன்று ஆட்சிக்கு வந்தவுடன் ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புபட்டவர்கள் எவரும் அடையாளம் காணப்பட்டதாக தெரியவில்லை. ஈஸ்டர் தாக்குதல் அறிக்கை முற்றுமுழுதாக அரசியல் மயப்படுத்தப்பட்ட ஒன்றாகவே வெளியிடப்பட்டுள்ளது. 

அரசாங்கத்திற்கு சவாலென நினைக்கும் நபர்களை இலக்குவைத்து அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளமை தெளிவாக தெரிகின்றது. ஆனால் இந்த தாக்குதலுடன் நேரடியான தொடர்புகளை கொண்டுள்ளவர்கள், யார் காரணம் என்ற அனைத்து உண்மைகளும் மறைக்கப்பட்டுள்ளன. 

எனவே அரசாங்கம் மக்களை ஏமாற்றியது மட்டுமல்லாது இந்த தாக்குதலை அரசாங்கம் மூடி மறைக்க நடவடிக்கை எடுப்பதாக சந்தேகம் எழுகின்றது. குற்றவாளிகளுக்கும் அரசாங்கத்திற்கும் தொடர்புகள் இருக்குமா என்ற கேள்வியும் எழுகின்றது.

ஆட்சியாளர்களுக்கு தேவையான அதிகார பலம் கிடைத்துவிட்டது, 20 ஆம் திருத்தம் நிறைவேற்றப்பட்டுவிட்டது. மக்களின் பெரும்பான்மை ஆதரவு இருப்பதை அவர்கள் சாதகமாக பயன்படுத்திக்கொண்டு தமது குடும்ப அரசியலை மீண்டும் முன்னெடுக்க ஆரம்பித்துவிட்டனர். 

எனவே இதற்கு மத்தியில் அவர்களுக்கு ஈஸ்டர் தாக்குதல் விடயங்கள் முக்கியமான ஒன்றல்ல. எனவே ஈஸ்டர் தாக்குதல் உண்மைகளை மூடி மறைக்கவேண்டிய தேவை அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது என்பதை இப்போதாவது மக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்.

இந்த நாட்டில் இன்னமும் தேசிய பாதுகாப்பு கவுன்சில் உத்தியோகபூர்வமாக கூடுவதில்லை. எனவே நாம் ஆட்சிக்கு வந்ததும் தேசிய பாதுகாப்பு கவுன்சிலை சட்டபூர்வமாக  அங்கீகரித்து அதனை பாராளுமன்றத்தில் நிறைவேற்றி, ஈஸ்டர் தாக்குதலின் பின்னால் உள்ள உண்மையான சூத்திரதாரி யார் என்பதையும், அதற்கு இடமளித்த அரசியல் தலைமைகள் யார் என்பதையும் கண்டறிந்து அவர்களுக்கு மரண தண்டனையை பெற்றுக்கொடுப்போம் என வாக்குறுதியளிக்கிறேன் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50