நாடளாவிய ரீதியில் இன்று காலை 6.00 மணியுடன் பதிவான கடந்த 24 மணிநேரப் பகுதிகயில் வீதி விபத்துக்களில் சிக்கிய மொத்தம் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

நேற்றைய தினம் மாத்திரம் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் எட்டுப் பேர் உயிரிழந்துள்ளதுடன, மீதமுள்ள நான்கு பேர் கடந்த வாரம் பதிவான விபத்துக்களின்போது காயமடைந்து சிகிச்சை பெற்று வந்தவர்கள் ஆவர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன கூறினார்.

இதேவேளை வீதி விபத்துக்களை குறைப்பதற்காக மோட்டார் வாகன போக்குவரத்து திட்ட சட்டங்களை அவசியம் கடைபிடித்து வாகனங்களை செலுத்துமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.