அணுசக்தி ஒப்பந்தத்தை புதுப்பிக்க ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் யோசனையை ஈரான் நிராகரிப்பு

Published By: Vishnu

01 Mar, 2021 | 09:08 AM
image

2015 ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தத்தை மீட்பதற்கான வழிகளைப் பற்றி விவாதிக்க அமெரிக்கா மற்றும் பிற முக்கிய சக்திகளுடன் முறைசாரா சந்திப்பை நடத்துவதை ஈரான் ஞாயிற்றுக்கிழமை நிராகரித்துள்ளது.

அதேநேரம் ஈரான், வொஷிங்டன் முதலில் அதன் ஒருதலைப்பட்ச பொருளாதாரத் தடைகள் அனைத்தையும் நீக்க வேண்டும் என்று வலியுறுத்தியது.

"அமெரிக்கா மற்றும் மூன்று ஐரோப்பிய சக்திகளின் சமீபத்திய நடவடிக்கைகள் மற்றும் அறிக்கைகளை கருத்தில் கொண்டு, ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கை தலைவரால் முன்மொழியப்பட்ட இந்த நாடுகளுடன் முறைசாரா சந்திப்பை நடத்துவதற்கான நேரத்தை ஈரான் கருத்தில் கொள்ளவில்லை" என்று அந் நாட்டு வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் சயீத் காதிப்சாதே கூறினார். 

ஈரானின் இந்த நடவடிக்கை ஏமாற்றமளிப்பதாக அமெரிக்கா கூறியுள்ளதுடன், "அர்த்தமுள்ள இராஜதந்திரத்தில் மீண்டும் ஈடுபட" தயாராக உள்ளதாகவும் சுட்டிக்காட்டியது.

அணுசக்தி உடன்படிக்கை மற்றும் பிற நாடுகளுடன் முறைசாரா சந்திப்பை நடத்த ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கை தலைவர் ஜோசப் பொரெல் முன்வைத்த திட்டத்தை தெஹ்ரான் ஆய்வு செய்து வருவதாக ஈரானிய அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். 

அப்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 2018 ல் ஒப்பந்தத்திலிருந்து விலகிய பின்னர் ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை மீண்டும் விதித்தார். 

எனினும் தற்சமயம் அணு ஆயுதங்களை வாங்குவதைத் தடுக்கும் நோக்கில் ஈரானுக்கு எதிரான பரந்த பொருளாதாரத் தடைகளை இரத்து செய்த உடன்படிக்கைக்கு இரு நாடுகளும் மீண்டும் இணங்குவது குறித்து ஈரானுடன் பேசத் தயாராக இருப்பதாக ஜனாதிபதி ஜோ பைடனின் புதிய நிர்வாகம் கூறியுள்ளது.

இருப்பினும் ஈரான், வொஷிங்டன் முதலில் அதன் ஒருதலைப்பட்ச பொருளாதாரத் தடைகள் அனைத்தையும் நீக்க வேண்டும் என்ற கருத்தில் உறுதியாகவுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அடுத்த அதிரடி! - அமெரிக்க கல்வித்...

2025-03-21 14:37:02
news-image

அருகில் உள்ள துணைமின்நிலையத்தில் தீ -...

2025-03-21 13:03:24
news-image

ஆயிரம் சைபர் டிரக் கார்களைத் திரும்பப்...

2025-03-21 13:15:48
news-image

இஸ்ரேலின் விமானதாக்குதலில் பெற்றோர்கள் பலி- காசாவின்...

2025-03-21 11:02:57
news-image

காசாவில் இஸ்ரேலின் தாக்குதலில் கர்ப்பிணிபெண்ணொருவரும் பலி

2025-03-20 17:23:18
news-image

பாலஸ்தீன ஆதரவு மாணவர்களிற்கு எதிரான டிரம்ப்...

2025-03-20 13:53:10
news-image

இந்தியாவில் பஞ்சாப் எல்லையில் ஒரு வருடத்திற்கு...

2025-03-20 12:39:09
news-image

உக்ரைனின் மின்நிலையங்கள் அணுஉலைகளை அமெரிக்கா நிர்வகிக்க...

2025-03-20 11:26:42
news-image

அமெரிக்காவில் சிஐஏ தலைமையகத்திற்கு வெளியே நபர்...

2025-03-19 21:20:40
news-image

டிரம்பிற்கு வழங்கிய வாக்குறுதியை ஒரு சில...

2025-03-19 15:06:57
news-image

அமெரிக்காவில் அரசியலுக்காக மக்கள் இலக்குவைக்கப்படும் நிலை...

2025-03-19 13:37:46
news-image

ஜோன்எவ் கென்னடி படுகொலை - ஆவணங்களை...

2025-03-19 11:03:10