நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் நடைபெறுகின்ற நிலையில் பரீட்சை நிலையங்களை அண்மித்துள்ள பகுதிகளில் ஒலி மாசு தொடர்பான முறைப்பாடுகள் குறித்து விசேட கவனம் செலுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது போன்ற முறைப்பாடுகள் தொடர்பில் விசேட நடவடிக்கை மேற்கொள்ள பிராந்திய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ்மா அதிபரும், பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான அஜித் ரோஹன கூறினார்.

சாதாரண தரப் பரீட்சைகள் நடைபெறும் காலத்தில் காவல்துறை கல்வி மற்றும் சுகாதார பிரிவுகளுடன் நெருக்கமாக செயல்படும் என்றும் அவர் கூறினார்.