காணாமல்போனவர்கள் தொடர்பாக அலுவலகம் அமைப்பது தொடர்பான சட்டமூலம்  நிறைவேறியது. ஆனால் பாராளுமன்றம் தோல்வி கண்டுவிட்டது. இதற்கான பொறுப்பை பொது எதிர்க் கட்சி ஏற்றுக்கொள்ள வேண்டும் என சபை முதல்வரும்  அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். 

தகவல்களை  பெற்று  காணாமல்போனோரின்  குடும்பங்களின்  கண்ணீரை  துடைப்பதே  இச்சட்டமூலத்தின்  நோக்கமாகும் என்று அமைச்சர் தெரிவித்தார். 

காணாமல்போனவர்கள் தொடர்பான அலுவலகம்  (ஸ்தாபித்தாலும், நிர்வகித்தாலும் பணிகளை நிறைவேற்றுவதாலும்) தொடர்பான சட்டமூலத்தை பாராளுமன்றத்திலே நிறைவேற்றிக்கொண்டது. மற்றும் அதன் போது  ஏற்பட்ட எதிர்கட்சியின்  கூச்சல் குழப்பம் எதிர்ப்பு    தொடர்பில்  கேட்டபோதே அமைச்சர்  லக் ஷமன் கிரியெல்ல இவ்வாறு  தெரிவித்தார். 

அமைச்சர் இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில், இது நாட்டுக்கு  முக்கியமானதொரு சட்ட மூலமாகும். 1987--89களில் மற்றும் 2009 இறுதிக் கட்ட யுத்தத்தில் காணாமல்போனவர்களுக்கு என்ன நடந்தது?  அவர்கள்  உயிருடன்  இருக்கின்றார்களா? இல்லையா? என்பதை கண்ணீருடன் வாழும் காணாமல்போனவர்களின் தாய்மார், கணவன்மார், மனைவிமார் மற்றும் உறவினர்கள்  தெரிந்து கொள்வதற்கு  இச்சட்டமூலம் முக்கியமாதானாகும். 

எனவே இது தொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதத்தை  நடாத்தி அச்சட்டமூலத்தின் மேலாக்கம்  தொடர்பில்  மக்களுக்கு தெளிவை ஏற்படுத்தியிருக்கலாம். 

ஆனால் அவ்வாறானதொரு நிலைமையை பொது எதிர்க்கட்சிகள் தமது அரசியலுக்காக குழப்பியடித்தன.