இலங்கையில் ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசி டோஸ்களை பெற்றவர்களின் எண்ணிக்கை 466,350 ஆக உயர்வடைந்துள்ளது.

நேற்று மாத்திரம் ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசி அளவை 24,374 நபர்களுக்கு வழங்கியதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

கோவிட் -19 தேசிய தடுப்பூசி இயக்கத்தை இலங்கை ஜனவரி 29 ஆம் திகதி தொடங்கியமையும் குறிப்பிடத்தக்கது.