2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகளை எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கல்வியமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.

அதற்கமையவாக செப்டெம்பர் மாதத்தில் பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்கள் அனுமதிக்கப்படுவர் என்றும் கல்வி அமைச்சர் கூறினார்.

இதேவேளை இன்று ஆரம்பமகாவுள்ள சாதாரண தரப் பரீட்சை முடிவுகளை ஜூன் மாதத்தில் வெளியிட எதிர்பார்க்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

குருணாகல் மலியதேவ முன்மாதிரி வித்தியாலயத்திற்கு விஜயம் மேற்கொண்டு கல்வி பொதுத்தாரதர பத்திர சாதாரண தரபரீட்சைக்கான சகல ஏற்பாடுகளையும் பார்வையிட்டதன் பின்னர் கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனைக் கூறினார்.