டெல்லியின் அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (AIIMS) இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து தனது டுவிட்டரின் இன்று காலை பதிவிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, "AIIMS இல் கொவிட்-19 தடுப்பூசியின் முதல் டோஸை எடுத்தேன்.

கொவிட்-19 க்கு எதிரான உலகளாவிய போராட்டத்தை வலுப்படுத்த எங்கள் மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் விரைவான நேரத்தில் எவ்வாறு பணியாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவை கொவிட் இல்லாத நாடாக மாற்ற தடுப்பூசி பெற தகுதியுள்ள அனைவருக்கும் பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுப்பதாகவும் கூறினார்.