ஐக்கிய தேசிய கட்சியின் முக்கியஸ்தர்கள் திருகோணமலைக்கு விஜயம் செய்துள்ளதுடன் தேசிய விடுதலை மக்கள் முண்ணனியின் தலைவர் முஸம்மில் முகைதீனை இன்று (28)அவரது கட்சி தலைமையகமான முள்ளிப்பொத்தானையில் உள்ள" முள்ளி வில்லா"வில் ஒரு நல்லிணக்கமான சந்திப்பொன்றினை ஏற்பாடு செய்திருந்தனர். 

இதன் போது அல் ஹிஜ்ரா ஜூம்ஆ பள்ளி வளாகத்தில் மரநடுகையும் இடம் பெற்றதோடு, சமூக தொண்டு நிறுவனமான அல்வபா பவுண்டேசன் நிறுவனத்துக்கு 60 மரக்கன்றுகளையும் ஐக்கிய தேசிய கட்சியின் முக்கியஸ்தர்கள் வழங்கி வைத்தார்கள். 

குறித்த நிகழ்வில் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவரும் முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருமான ருவான் விஜேவர்தன, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திப் சமரசிங்க, தேசிய விடுதலை மக்கள் முன்னணியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் அப்துல் அஸீஸ் ஜௌஹரி உட்பட பலர் பங்கேற்றார்கள்.

இதில் உரையாற்றிய முன்னாள் இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன, ஐக்கிய தேசிய கட்சியை பலப்படுத்தி இந்த நாட்டின் ஆட்சி அதிகாரத்தை மீண்டும் கைப்பற்றுவோம்.

திருகோணமலை மாவட்டத்தில் இருக்கின்ற சில இயற்கை வளங்களையும் எமது நாட்டையும் பாதுகாக்கவும் ஒரு முன்மாதிரியான இடமாக நாங்கள் அதனை எதிர்காலத்தில் கொண்டு செல்லவுள்ளோம்.

டி எஸ் சேனாநாயக்க பரம்பரை போன்ற ஆட்சியை இந்த நாட்டு மக்களின் மூவினங்களை இணைத்துக் கொண்டு அதிகாரங்களை கொண்டு ஆட்சியை திட்டமிட்டுச் செய்வோம். தமிழ் சிங்கள முஸ்லிம் என இனமத பேதமற்ற முறையில் இதனை வழிநடத்தி ஐக்கிய தேசிய கட்சியை வலுப்படுத்துவதன் ஊடாகவே இந்ந நாட்டை கொண்டு செல்லோம் என்றார்.