புத்தளம் நாகவில்லு பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் கடற்படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொழும்பிலிருந்து பாலாவி சிமெந்து தொழிற்சாலைக்கு பொலித்தீன் கழிவுகளை ஏற்றிச் சென்ற கனரக லொறியுடன் புத்தளம் தம்பபண்ணி கடற்படை முகாமிலிருந்து கொழும்பு சென்ற கடற்படை வீரர் ஒருவர் மோதி விபத்துக்குள்ளாகி ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து நேற்று இரவு 8.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் குறித்த விபத்தில் உயிரிழந்த கடற்படை வீரர் திருகோணமலை பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய ஒருவரென பொலிசார் தெரிவித்தனர்.
இதன்போது வாகனத்தின் சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் உயிரிழந்தவரின் சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் பிரேத அரையில் வைக்கப்பட்டதுடன் மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM