நீர்கொழும்பு சிறைச்சாலையில் 32 வயதான சிறைச்சாலை காவல் அதிகாரியின் லாக்கரிலிருந்து ஐந்து கையடக்கத் தொலைபேசிகளை மீட்டுள்ளதாக சிறைச்சாலை செய்தித் தொடர்பாளர்  சந்தன ஏகநாயக்க தெரிவித்துள்ளார்.

விசாரணையின்போது சிறைச்சாலை அதிகாரியினால் தொலைபேசிகள் தொடர்பான உரிமைகளை நிரூபிக்க முடியாது போனதாகவும் கூறினார்.

இதேவேளை கைதிகளுக்கு விநியோகிப்பதற்காக இவ்வாறு கையடக்கத் தொலைபேசிகள் கொண்டு வரப்பட்டிருக்கலாம் எனத் தெரிவித்துள்ள சிறைச்சாலை திணைக்கள அதிகாரிகள், குறித்த சிறைச்சாலை காவல் அதிகாரியை பணி இடைநிறுத்தம் செய்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.