புத்தளம் - கொழும்பு பிரதான வீதியின் நாகவில்லு பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் பங்கதெனிய பகுதியைச் 36 வயதுடைய நவர் ஆவார்.

நேற்றிரவு புத்தளத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று, எதிர் திசையில் பயணித்த லொறி ஒன்றுடன் மோதுண்டமையினாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதியை, அங்கிருந்தவர்கள் உடனடியாக புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும், அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.