ஐக்கிய நாடுகள் சபையின், யுனெஸ்கோ அமைப்பின் பணிப்பாளர் நாயகம் இரினா பொகோவா இந்த மாதத்தில் இலங்கைக்கான உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.

இந்தமாதம் 14 ஆம் திகதி தொடக்கம் 17 ஆம் திகதிவரையிலான காலப்பகுதியில் இவர் விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விஜயம் இலங்கைக்கான முதலாவது விஜயமாக அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவரிக் விஜயத்தின்  போது சமதானம் மற்றும் நல்லிணக்கம் தொடர்பிலும், 2030 ஆம் ஆண்டு இலங்கையின் நிலையான அபிவிருத்தியில் ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவு தொடர்பிலும் கலந்துரையாடப்படும் என தெரிவிக்கப்படுகின்றது,