லொனெக் தோட்டத்தை அண்மித்த பகுதியின்  பிரதான வீதியில் பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் இப்பகுதிக்கான மின்சாரம் மற்றும் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளதாக நோட்டன்பிரிட்ஜ் பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று அதிகாலை 4 மணிக்கு இடம்பெற்ற இச்சம்பவத்தில், குறித்த மரம் மின்சார இணைப்புகள் மீது விழுந்ததினால் மின்சார கம்பங்கள் முற்றாக பாதித்ததுடன் மின் இணைப்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளன. 

இதேவேளை பிரதான வீதியில் இம்மரம் முறிந்து விழுந்ததில் போக்குவரத்தும் பல மணி நேரம் ஸ்தம்பிதமடைந்திருந்தது.

இதனையடுத்து இலங்கை மின்சார சபையினர் அவ்விடத்திற்கு விரைந்த மரங்களை வெட்டி அகற்றியுள்ளனர்.

மேலும் மின்சார இணைப்பினை சீர்செய்வதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக இலங்கை மின்சார சபையின் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.