ஆர்ப்பாட்டத்தை கலைக்க மியன்மார் பொலிஸார் முன்னெடுத்த துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் பலி ; பலர் காயம்

Published By: Vishnu

28 Feb, 2021 | 11:23 AM
image

பெப்ரவரி 1 இராணுவ சதித்திட்டத்திற்கு எதிரான பல வார கால ஆர்ப்பாட்டங்களை முடிவுக்கு கொண்டுவருவதற்கான முயற்சியில் மியான்மர் பொலிசார் ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அத்துடன் ஆர்ப்பாட்டங்களை கலைக்க பொலிஸாரும், இராணுவத்தினரும் முன்னெடுத்த முயற்சியின்போது பலர் காயமடைந்துள்ளதாகவும் மியன்மார் அரசியல்வாதியொருவரும், அந் நாட்டு ஊடகங்களும் உறுதிப்படுத்தியுள்ளன.

அதன்படி டேவி நகரில் பொலிசார் நடத்திய துப்பாக்கி சூடு ஒருவரைக் கொன்றது மற்றும் பலரை காயப்படுத்தியது என்று அரசியல்வாதி க்யாவ் மின் ஹ்டிகே ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவையிடம் உறுதிப்படுத்தியுள்ளார். 

அதேநேரம் டேவி வோட்ச் செய்தி ஊடகமும் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் பலர் காயமடைந்திருப்பதாகவும் கூறியுள்ளது.

இது தொடர்பில் ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவை நிறுவனம் மியன்மாரின் காவல்துறை மற்றும் ஆளும் இராணுவ சபையின் செய்தித் தொடர்பாளருக்கு மேற்கொண்ட தொலைபேசி அழைப்புக்களுக்கும் பதில் கிடைக்கவில்லை.

இராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றி, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத் தலைவர் ஆங் சான் சூகி மற்றும் அவரது கட்சித் தலைமையின் பெரும்பாலானோர் இராணுவத்தினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் மியன்மார் குழப்பத்தில் தள்ளப்பட்டுள்ளது.

ஏறக்குறைய 50 ஆண்டுகால இராணுவ ஆட்சியின் பின்னர் மியான்மரின் ஜனநாயகத்தை நோக்கி முன்னேறிய சதி, நூறாயிரக்கணக்கான எதிர்ப்பாளர்களை வீதிகளில் கொண்டு வந்து மேற்கத்திய நாடுகளிடமிருந்து கண்டனத்தை ஈர்த்தது, சில வரையறுக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளை விதித்தது.

ஆர்ப்பாட்டங்களின் விளைவாக மியன்மாரின் பிரதான நகரமான யாங்கோனில், பலருக்கு இரத்த காயங்கள் ஏற்பட்டுள்ளமை சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள புகைப்படங்கள் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

எனினும் அவர்கள் எவ்வாறு காயமடைந்தார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

காவல்துறையினர் ஸ்டன் கையெறி குண்டுகளை வீசினர், கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசினர் மற்றும் இறப்பர் தோட்டக்கள் அடங்கி துப்பாக்கி பிரயோகத்தையும் முன்னெடுத்துள்ளதாக சாட்சிகள் உறுதிப்படுத்தியுள்ளன.

இதேவேளை இராணுவ சதித்திட்டத்தைத் தடுக்க "தேவையான எந்த வழியையும்" பயன்படுத்துமாறு ஐ.நா.வை வலியுறுத்திய ஒரு நாள் கழித்து, மியான்மரின் இராணுவ ஆட்சியாளர்கள், ஐக்கிய நாடுகள் சபைக்கான நாட்டின் தூதர் 'கியாவ் மோ துன்' பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17