நாட்டின் மிகப்பெரிய நகரமான ஆக்லாந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் அடுத்த ஏழு நாள் முடக்கல் நிலைக்குச் செல்லும் என்று நியூசிலாந்தின் பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் சனிக்கிழமை தெரிவித்தார்.

ஆக்லாந்தில் கிட்டத்தட்ட 2 மில்லியன் குடியிருப்பாளர்கள் மூன்று நாள் முடக்கல் நிலையினை எதிர்கொண்ட இரண்டு வாரங்களுக்குப் பிறகு, அங்குள்ள குடும்பத்தில் ஒருவருக்கு கொரோனா வைரஸின் மிகவும் பரவக்கூடிய இங்கிலாந்தின் மாறுபாறு கண்டறியப்பட்டுள்ளது.

அந்த நபர் எவ்வாறு பாதிக்கப்பட்டார் என்பதை உடனடியாக உறுதிப்படுத்த முடியாத சுகாதார அதிகாரிகள், புதிய நோய்த்தொற்றின் மரபணு வரிசைமுறை நடந்து கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளனர்.

அந்த நபர் பல பொது இடங்களுக்கு சென்றுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில், ஆக்லாந்தர்களை மீண்டும் பாதுகாக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளமையினால் நியூஸிலாந்து பிரதமர் இவ்வறு முடக்கல் நிலையினை அறிவித்துள்ளார்.

புதிய தொற்று முந்தைய பெப்ரவரி கிளஸ்டருடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிய சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், தற்சமயம் 12 நோய்த்தொற்றுகள் உள்ளன.

மூன்றாம் நிலை கட்டுப்பாடுகளுடன் தற்சமயம் ஆக்லாந்து முடக்கப்பட்டுள்ளமையினால், அத்தியாவசிய வர்த்தகம் மற்றும் அத்தியாவசிய வேலைகளுக்கு மட்டுமே மக்கள் வீட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பொது இடங்கள் மூடப்படும். நாட்டின் பிற பகுதிகளில் கட்டுப்பாடுகள் பொதுக் கூட்டங்களுக்கான வரம்புகள் உட்பட இரண்டாம் நில‍ை கட்டுப்பாடுகமை் கடுமையாக்கப்பட்டுள்ளது.