மேற்கிந்தியத்தீவுகளுடனான மூன்று போட்டிகள் இருபதுக்கு : 20 கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணியின் ஸ்டாண்ட்-இன் தலைவராக அஞ்சலோ மெத்தியூஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கையின் மேற்கிந்தியத்தீவுகள் சுற்றுப் பயணத்தின் இருபதுக்கு : 20 தொடரின் அணித் தலைவராக முன்னதாக தசூன் ஷானக்க நியமிக்கப்பட்டிருந்தார்.
எனினும் அமெரிக்க போக்குவரத்து விசாவை பெறுவதில் தாமதம் ஏற்பட்டமையினால், ஷானக்க இன்னும் அணியுடன் இணைந்து கொள்ளாத நிலைமையின் காரணமாகவே அஞ்சலோ மெத்தியூஸ் இவ்வாறு அணியின் ஸ்டாண்ட்-இன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று தேர்வாளர்கள் கூறியுள்ளனர்.
இலங்கை அணியானது கடந்த வாரம் மேற்கிந்தியத்தீவுகளுக்கு புறப்படும்போது தசூன் ஷானக்க தனது செல்லுபடியாகும் கடவுச்சீட்டை இழந்ததான் காரணமாக இவ்வாறு விசா பெறுவதில் சிக்கல் நிலை ஏற்பட்டது.
விசா பிரச்சினைகள் தீர்க்கப்பட்டவுடன் அவர் அணியுடன் இணைந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM