நாட்டில் நேற்றைய தினம் 460 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனால் இலங்கையில் பதிவான மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 82,890 ஆக பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளான 748 நோயாளர்கள் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அதனால் கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கையும் 78,373 ஆக பதிவாகியுள்ளது.

தற்சமயம் நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலை மற்றும் சிகிச்சை நிலையங்களில் 4,053 நோயாளர்கள் சிகிச்சை பெற்றுவதுடன், 379 பேர் வைத்தியக் கண்காணிப்பிலும் உள்ளனர்.

அதேநேரம் கொரோனா தொற்றினால் நாட்டின் பதிவான உயிரழப்புகளின் எண்ணிக்கையும் 464 ஆக காணப்படுகிறது.