வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளால் கிளிநொச்சியில் நாளை போராட்டம்

28 Feb, 2021 | 07:15 AM
image

சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணையை வலியுறுத்தி நாளையதினம் கிளிநொச்சியில் பாரிய கவனயீர்ப்பு போராட்டத்திற்கு வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் ஒரு பிரிவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

இந்த கவனயீர்ப்பு போராட்டமானது நாளை திங்கட்கிழமை காலை எட்டு மணிக்கு கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக ஆரம்பமாகி பழைய வைத்தியசாலையைச் சென்றடைந்து கவனயீர்ப்பு நடைபெறவுள்ளது.

இதுதொடர்பாக வடக்கு, கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பின் பணிப்பாளர் ப.கருணாவதி தெரிவிக்கையில்,

இலங்கை அரசாங்கத்தால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட இனவழிப்புக் குற்றங்கள், மனிதத்துவத்திற்கு எதிரான குற்றங்கள், போர்க் குற்றங்கள், வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தொடர்பாக இலங்கை அரசாங்கத்தை முழுமையான சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணைக்கு பிரித்தானியா, கனடா, ஜேர்மனி, மொண்டினீக்ரோ, மசிடோனியா, மாலாவி ஆகிய நாடுகளை உள்ளடக்கிய இணையனுசரனை நாடுகள் பரிந்துரைக்க வேண்டும்.

அத்துடன், கடந்தகால சம்பவங்களையும் நிகழ்காலத்தில் நடந்துகொண்டிருக்கும் நிலைமைகளையும் ஆராய்ந்தால் உள்ளூர் பொறிமுறை மூலமாகவோ அல்லது கலப்புப் பொறிமுறை மூலமாகவோ இலங்கையில் பொறுப்புக்கூறலை உண்மையாகக் கையாள எவ்வித சந்தர்ப்பங்களும் இல்லை என்பதைத் திட்டவட்டமாக சர்வதேசத்தின் கவனத்திற்குக் கொண்டுசெல்ல முடியும்.

இந்நிலையில், நடைபெறவுள்ள மாபெரும் போராட்டத்திற்கு மதத்தலைவர்கள், பொது அமைப்புகள், வர்த்தக சங்கங்கள், சமூக அமைப்புக்கள் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து உறவுகளையும் கலந்துகொண்டு தங்கள் ஆதரவை வழங்கி வலுச்சேர்க்குமாறு வேண்டி நிக்கின்றோம்.

தொடர்ச்சியான அறவழிப் போராட்டத்தில் ஈடுபடுவதன் மூலமே எமக்கான நீதியைப் பெறமுடியும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுவஸ்திகா அருள்லிங்கம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்...

2025-03-17 15:27:32
news-image

முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டம்...

2025-03-17 22:16:32
news-image

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் பிரதான...

2025-03-17 22:07:08
news-image

மகர சிறைச்சாலையில் மூடப்பட்டுள்ள பள்ளிவாசலை ,...

2025-03-17 22:10:24
news-image

சிறுவயது திருமணம் அனைத்து இனத்தவர்களிலும் பொதுப்...

2025-03-17 22:18:12
news-image

தென்கொரியாவில் வேலைவாய்ப்புப் பெற்றுத் தருவதாக கூறி...

2025-03-17 22:20:00
news-image

நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமையை இரத்துச்...

2025-03-17 22:35:48
news-image

வடக்கு, கிழக்கிலுள்ள வரலாற்று தொன்மையான ஆலயங்களை...

2025-03-17 22:14:30
news-image

பரீட்சைகள் திணைக்களம் ஊடாக அரபுக்கல்லூரிகளில் நடத்தப்படும்...

2025-03-17 22:05:15
news-image

கொழும்பு மாநகரசபை மேயர் வேட்பாளர் எரான்...

2025-03-17 21:57:02
news-image

முல்லைத்தீவு குருந்தூர் மலை விவகாரம் ;...

2025-03-17 21:59:17
news-image

யாழ்.தையிட்டி விகாரையை அண்மித்த பகுதியில் சட்டவிரோதமாக...

2025-03-17 15:22:29