(இராஜதுரை ஹஷான்)
தேசிய உற்பத்திக்கு அரசாங்கம் எந்நிலையிலும் முன்னுரிமை கொடுக்கும். அமெரிக்காவின் களஞ்சியசாலையாக மாற்ற நினைத்த நாட்டை ஏற்றுமதி விவசாய வலயமாக மாற்றியமைக்க தீர்மானித்துள்ளோம்.
10 மாவட்டங்களில் 100 ஏற்றுமதி விவசாய கிராமம்,வலயம் ஸ்தாபிக்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
அம்பாந்தோட்டை பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
விவசாயம் மற்றும் சிறுஏற்றுமதி உற்பத்திகளுக்கு முன்னுரிமை வழங்கி புதிதாக இராஜாங்க அமைச்சுக்கள் உருவாக்கப்பட்டன. பத்திக் அமைச்சர், மெடி அமைச்சர் என ஒரு தரப்பினர் கேலி செய்தார்கள்.
இவர்களின் செயற்பாடு அரசியல் பிரச்சாரமாக மாத்திரமே காணப்பட்டது. தேசிய உற்பத்திகள் அடைந்துள்ள வீழ்ச்சி, பற்றியும், தேசிய உற்பத்திகளை முனனேற்றமடைய செய்வது குறித்தும் இவர்கள் அக்கறை கொள்ளவில்லை. நாம் ஆட்சிக்கு வரும் அனைத்து சந்தர்ப்பத்திலும் தேசிய உற்பத்திகளுக்கு முன்னுரிமை வழங்கினோம். அதற்கமையவே சுபீட்சமான இலக்கு கொள்கை திட்டத்தில் தேசிய உற்பத்திகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது.
2005 ஆம் ஆண்டு மஹிந்த சிந்தனை என்ற செயற்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட போது அப்பெயரை குறிப்பிட்டு பலர் சிரித்தார்கள் என்பதை நீங்கள் அறவீர்கள்.எமது கொள்கை திட்டத்துக்கு அமைய யுத்தத்தை நிறைவு செய்து.நாட்டை அபிவிருத்தி செய்து நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு சென்ற போது சிரித்தவர்களுக்கு பதில் இல்லாமல் போனது.
மஹிந்த சிந்தனையை அடிப்படையாகக் கொண்டு சுபீட்சமான இலக்கு கொள்கை திட்டத்தை முன்வைத்துள்ளோம்.தேசிய உற்பத்திகளை மேம்படுத்தி சர்வதேச சந்தையில் தனித்துவமான போட்டித்தன்மை மிக்க பொருளாதார சூழலை ஏற்படுத்துவது சுபீட்சமான இலக்கு கொள்கையில் எதிர்பார்ப்பாகும்.இதற்கான ஆரம்பக்கட்ட முயற்சியை சிறிமாவோ பண்டாரநாயக்க அவர்கள் முன்னெடுத்தார்.பிற்பட்ட காலத்தில் ஆட்சியில் இருந்தவர்கள் இறந்த காலத்தை மறந்து செயற்பட்டார்கள்.
எமது நாட்டின் கறுவா உள்ளிட்ட பொருட்களுக்கு உலக சந்தையில் அதிக கேள்வி காணப்படுகிறது.ஒல்லாந்தர்,போர்த்துக்கேயர்கள் மற்றும் ஆங்கிலேயர்கள்.இந்நாட்டக்கு தேயிலை,இறப்பர் மற்றும் தேங்காய் ஆகியவற்றை தேடி வரவில்லை.
கறுவா,சாதிக்காய் மிளகு ஆகியவற்றை தேடி வருகை தந்தார்கள்.பிற்பட்ட காலத்தில் தேயிலை,இறப்பர் இ தென்னை ஆகியவற்றை பொருளாதார பயிர்ச்செய்கைகளாக முன்னெடுத்தார்கள்.சுதந்திரம் பெற்ற பின்னர் எமதுவாசனை திரவியங்களை பிரதான பொருளாதார பயிர்செய்கையாக கருதாமல் அதனை அழிவு பாதைக்கு கொண்டு சென்றார்கள்.வெளிநாட்டவர்கள் வழங்கிய தேயிலைஇறப்பர் தென்னை ஆகியவற்றின் மீது நம்பிக்கை வைத்தார்கள்.
தேசிய உற்பத்திகளை மேம்படுத்தவும், எமது நாட்டுக்கே உரித்தான உறபத்திகளை அபிவிருத்தி செய்யவும் உரிய திட்டம் வகுக்கபட்டுள்ளது.அமெரிக்காவின் களஞ்சியசாலையாக மாற்றவிருந்த நாட்டை தேசிய உற்பத்திகளின் களங்சியசாலையாக மாற்றியமைக்கவுள்ளோம்இ.ஏற்றுமதி விவசாயத்தை மேம்படுத்தும் நோக்கில் நாடு தழுவிய ரீதியில் 100 ஏற்றுமதி விவசாய வலயங்கள் ஸ்தாபிக்கப்படும்.
கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்தி அதனூடாக தேசிய பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வது அரசாங்கத்தின் பிரதான இலக்காகும்.நெருக்கடியாக சூழ்நிலையில் சுட தேசிய உற்பத்திகளை பாதுகாக்கும் வகையில் அரசாங்கம் பல தீர்மானங்களை எடுத்துள்ளது.
மஞ்சள் இறக்குமதி தடை செய்யப்பட்டதால் 1000 மில்லியன் நிதி சேமிக்கப்பட்டுள்ளதுடன் மஞ்சள் உற்பத்தி தேசிய மட்டத்தில் ஒப்பீட்டளவில் முன்னெற்றமடைந்துள்ளது. ஆகவே தேசிய உற்பத்தியின் ஊடாகவே அரசாங்கம் பொருளாதாரத்தை முன்னேற்றும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM