(செ.தேன்மொழி)

வெலிக்கடை சிறைச்சாலையில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது தொலைபேசி உள்ளிட்ட பொருட்கள் பல மீட்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

சிறைச்சாலை ஆணையாளரின் உத்தரவுக்கமைய இன்று சனிக்கிழமை  சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் சிறைச்சாலைகள் புலனாய்வு பிரிவினரால் வெலிக்கடை சிறைச்சாலையில் கைதிகள் உள்ள பிரிவில் விசேட சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது 11 தொலைபேசிகள் , 4 சிம் அட்டைகள் , 8 மின் கலங்கள் , 6 மின்னேற்றிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. 

இந்த பொருட்கள் எவ்வாறு எடுத்துவரப்பட்டது என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் , கொழும்பில் அமைந்துள்ள சிறைச்சாலைகளில் தொடர்ந்தும் இதுப்போன்ற சுற்றிவளைப்புகளை முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.