நாட்டில் இறக்குமதியை இடைநிறுத்தாது விட்டால் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி கண்டிருக்கும்

Published By: J.G.Stephan

27 Feb, 2021 | 06:18 PM
image

நாட்டில் இறக்குமதியை இடைநிறுத்தாது விட்டால் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி 300 ரூபாயாக வீழ்ச்சி கண்டிருக்கும் என இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் ஹப்ரால் தெரிவித்துள்ளார்.

யாழிற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள நிதி, மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் யாழ்ப்பாணத்தில் முதலீடுகள் மற்றும் கடன் வசதிகள் சம்மந்தமாக கலந்துரையாடல் ஒன்றினை நடத்தியிருந்தார்.

இந்த கலந்துரையாடல் இன்றையதினம் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றுள்ளது. இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே, இராஜாங்க  அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ரூபாயின் பெறுமதி பெருமளவில் வீழ்ச்சியடைந்திருந்தால் நாட்டில் பெரும்பாலான இறக்குமதியாளர்கள் இறக்குமதியைக் கைவிடவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும்.

வடக்கு மாகாணத்திலிருந்து தங்கம் கடத்தலைத்  தடுக்க தங்கம் மீதான வரியை இந்தியா போன்று பராமரிக்கவேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

மேலும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பூங்காக்களை அமைக்க முன்வரும் முதலீட்டாளர்களுக்கு நீர் நிலைகளை அண்டிய பிரதேசங்களில் 15 தொடக்கம் 20 ஏக்கர் காணியை வழங்க அரசு தீர்மானித்துள்ளது எனவும்  இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் ஹப்ரால் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37