எம்பிலிப்பிடிய - இரத்தினபுரி பிரதான வீதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 20 பேர் காயமடைந்துள்ளனர்.

குறித்த விபத்து இன்று அதிகாலை 4.45 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

சூரியவெவயில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற பஸ்வொன்றும் பிலியந்தலையில் இருந்து கதிர்காமம் நோக்கி சென்ற பஸ்வொன்றும் ஒன்றுடன் ஒன்று மோதியதாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர். 

விபத்தில் காயமடைந்தவர்களில் 11பேர் காவத்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவத்தை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.