பாதிக்கப்பட்ட கத்தோலிக்க மக்களுக்கு இழைக்கும் அநீதி : விரைவில் பேராயருடன் கலந்துரையாடுவோம் என்கிறார் காவிந்த ஜயவர்தன  எம்.பி

Published By: Digital Desk 2

27 Feb, 2021 | 03:14 PM
image

( இராஜதுரை ஹஷான் )

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் விவகாரம் குறித்து அராங்கம் நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியில் தோல்வியடைந்துள்ளது.

உண்மை காரணிகள் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கையில்  உள்ளடக்கப்படவில்லை. 

இதனை பாதிக்கப்பட்ட கத்தோலிக்க மக்களுக்கு இழைக்கும் அநீதியாகவே கருத வேண்டும். அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து கர்தினால்  மெல்கம் ரஞ்சித் ஆண்டகையுடன் பேச்சு வார்த்தையினை முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம் என பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்தார்.

அவர்  மேலும் குறிப்பிடுகையில்,

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் குறித்து விசாரணை நடவடிக்கைகளை முன்னெடுத்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை மீது நாட்டு மக்கள் குறிப்பாக கத்தோலிக்க மக்கள் பெரும் எதிர்பார்ப்பினை கொண்டுடிருந்தார்கள்.

குண்டுத்தாக்குதல் சம்பவத்தை  தடுக்க  முடியாமல் போனவர்கள் யார் என்பது தொடர்பில் ஆராயவே விசாரணை ஆணைக்குழு முழு காலத்தையும் செலவிட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பாதுகாப்பு ,தேசிய புலனாய்வு பிரிவினரது பலவீனம்,  தாக்குதல் சம்பவத்துக்கு சாதகமாக அமைந்தது என்பதை குண்டுத்தாக்குதல் இடம்பெற்ற மறுகணமே  நாட்டு மக்கள் அறிந்துக் கொண்டார்கள்.

தற்கொலை குண்டுத்தாரி சஹ்ரானின் பின்னணியில் இருந்தவர்கள் யார், என்பதையே கத்தோலிக்க மக்கள் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் எதிர்பார்த்தார்கள்.

பொதுஜன பெரமுன ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதலை ஜனாதிபதி மற்றும் பொதுத்தேர்தலில் பிரதான தேர்தல் பிரசாரமாக பயன்படுத்தி வெற்றியடைந்தார்கள்.

ஆட்சிக்கு வந்து குறுகிய காலத்தில் உண்மையான குற்றவாளியை பகிரங்கப்படுத்வதாக நாட்டு மக்களுக்கு வாக்குறுதி வழங்கினார்கள. ஆனால் தற்போது ஏனைய வாக்குறுதிகளைப் போன்று ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் விவகாரமும் பொய்யாக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கப்பெறவில்லை. ஆகவே அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து கர்தினால்  மெல்கம் ரஞ்சித் ஆண்டகையுடன் பேச்சுவார்த்தையினை முன்னெடுக்கவுள்ளோம்.

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பத்தை அரசியல் தேவைக்காக பயன்படுத்துவதை அரசாங்கம் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40