உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அறிக்கையால் ஆளும் கட்சிக்குள் முரண் - அமைச்சர் வாசுதேவவும் போர்க்கொடி

27 Feb, 2021 | 12:26 PM
image

(எம்.மனோசித்ரா)

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை முழுமையற்றதாகும். 

2019 ஜனாதிபதி தேர்தல் சதி , எம்.சி.சி. ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கான முயற்சி உள்ளிட்ட காரணிகளும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் தாக்கம் செலுத்துகின்றனவா என்பது தொடர்பான எந்தவொரு விடயமும் குறித்த அறிக்கையில் உள்ளடக்கப்படாமையினாலேயே இதனை முழுமையற்ற அறிக்கையாகக் கருதுவதாக நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் தனது நிலைப்பாட்டை தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் ,

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை முழுமையற்றதாகும். 

அதில் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டிய பிரதானி காரணி தொடர்பில் எதுவும் உள்ளடக்கப்படவில்லை. உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் எதிர்பார்க்கப்பட்ட பிரிதொரு விடயம் என்ன என்பதே இந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டிருக்க வேண்டிய பிரதான காரணியாகும்.

அதாவது எம்.சி.சி. ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்காக, நடைபெறவிருந்த தேர்தலை நோக்காக  உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் பிரிதொரு சிவில் கலவரத்தை உண்டாக்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தனவா என்பது தொடர்பில் ஆராயப்பட்டிருக்க வேண்டும்.

சஹ்ரான் மற்றும் அவர் சார்ந்தவர்களுக்கு தற்கொலை குண்டு தாக்குதல்களை மேற்கொள்வது மாத்திரமே இலக்காக காணப்பட்டது. 

ஆனால் அந்த தாக்குதலுடன் நாட்டிலுள்ள கத்தோலிக்க , சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் மத்தியில் பாரிய கலவரத்தை ஏற்படுத்தி அடுத்தடுத்த கட்டத்தில் என்ன நடக்க என்பதை சஹ்ரான் அறிந்திருக்க வாய்ப்பில்லை. 

எனவே இது போன்ற விடயங்கள் தொடர்பில் இந்த அறிக்கையில் எதுவும் வெளிப்படுத்தப்படவில்லை. அதன் காரணமாகவே இதனை முழுமையற்ற அறிக்கையாக நாம் கருதுகின்றோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:31:22
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள்...

2024-04-20 10:26:06
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 10:50:13
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28