20 இற்கு ஆதரவாக வாக்களித்தோர் ஜனாசாக்களை அடக்கம் செய்ய கிடைத்த அனுமதியை உரிமை கோர முடியாது - இம்ரான் மஹரூப்

27 Feb, 2021 | 08:24 AM
image

(எம்.மனோசித்ரா)

கொவிட் தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்கள் தகனம் செய்யப்பட்ட விடயத்தில் முஸ்லிம் மக்களின் அடிப்படை உரிமை மீறலுக்கான தீர்வானது, பல போராட்டங்களின் பின் சர்வதேசத்தின் அழுத்தங்களுக்கு மத்தியில் 350 ஜனாஸாக்கள் பலவந்தமாக எரிக்கப்பட்ட பின்னர்தான் கிடைத்துள்ளது.

 எனவே 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்க ஆதரவளித்தவரகள் உள்ளிட்ட எவரும் இதற்கு தனிப்பட்ட ரீதியில் உரிமைகோர முடியாது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப் தெரிவித்தார்.

கொவிட் தொற்றால் உயிரிழிப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதியளித்து வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ள நிலையில் , அது குறித்த நிலைப்பாட்டை தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் ,

கொரோனாவால் மரணித்த உடல்களை அடக்கம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது என்பது உலகநாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு உரிமையை இலங்கையில் உள்ள சிறுபான்மையினருக்கு வழங்காமல் அவர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட  இனவாதம் தழுவிய நயவஞ்சக செயற்பாடாகும். மறுக்கப்பட்ட உரிமையை பெற பலர் பல வழிகளிலும் போராடினர்.

நீதிமன்றம் சென்றதோடு , பிரார்த்தனைகளில் ஈடுபட்டு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து பல வழிகளிலும் இதற்கான போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. 

இவ்வாறான போராட்டங்களும் , பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் வருகையும் கொவிட் சடல விவகாரத்தில் தனது முடிவில் விடாப்பிடியாக இருந்த அரசாங்கத்தை அதன் முடிவை மாற்றிக் கொள்ள நிர்பந்தித்துள்ளன. எவ்வாறிருப்பினும் இதன்மூலம் அரசாங்கம் எமக்கு புதிதாக எந்த சலுகைகளையும் வழங்கவில்லை.

இந்த விவகாரத்தில் அடிப்படை உரிமை மீறலுக்கான தீர்வானது பல போராட்டங்களின் பின்னரும் , சர்வதேச அழுத்தங்களுக்கு மத்தியிலும் , 350 ஜனாஸாக்கள் பலவந்தமாக தகனம் செய்யப்பட்ட பின்னரும் தான் கிடைத்துள்ளது. எனவே 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஆதரவளித்தவர்கள் உள்ளிட்ட எவரும் இதற்கு தனிப்பட்ட ரீதியில் அனுமதி கோர முடியாது.

காரணம் குறித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் 20 ஆவது திருத்தத்திற்கு ஆதாரவாக வாக்களித்த அடுத்த தினமே இதற்கான அனுமதி வழங்கப்படவில்லை. 

அவர்களுக்கான தனிப்பட்ட தேவைகள் நிறைவேற்றப்பட்டதே தவிர , ஜனாசாக்களை அடக்கம் செய்ய அனுமதி கிடைக்கவில்லை. தற்போதைய அரசாங்கமானது இனவாதத்தை கையிலெடுத்து ஆட்சியை கைப்பற்றியது. ஆட்சியை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கும் அவர்களுக்கு இனவாதமே தேவைப்பட்டது.

வியாழக்கிழமை வரை இதற்காக இவர்களுக்கு ஜனாஸா தகனம் தேவைப்பட்டது. தற்போது அந்த தீர்மானம் மாற்றப்பட்டுள்ளதால் தற்போது முகம் மூடுதல் தடை , மதரஸாக்கள் தடை என கூறி இதன் அடுத்த பாகத்தை ஆரம்பித்துள்ளார்கள். இவற்றுக்கு முகங்கொடுக்கவும் நாம் தயாராகவேண்டும். 

கொரோனா சடலங்கள் கட்டாய தகனம் செய்யப்பட்டமையிலிருந்து மீள்வதற்கான போராட்டத்தில் எமக்கு ஒத்துழைப்பு வழங்கியவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.

அதற்கமைய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க ,தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், சாணக்கியன், சிறிதரன் ஐக்கிய மக்கள் சக்தியின் சகோதர பாராளுமன்ற உறுப்பினர்களும் சில பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட இதற்கு ஆதரவாக இருந்தார்கள். அவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலயத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம்

2024-04-18 14:31:10
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-18 14:17:05
news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

குறைவடைந்த தங்கத்தின் விலை!

2024-04-18 13:47:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09