நாட்டில் கொரோனா தொற்று காரணமாக மேலும் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் நாவடகல பகுதியைச் சேர்ந்த 69 வயதான ஆண் ஒருவர், நாரஹேன்பிட்டி பகுதியைச் சேர்ந்த 72 வயதான பெண், கண்டியைச் சேர்ந்த 70 வயது ஆண், கொழும்பு- 9 ஐ சேர்ந்த 71 வயது ஆண் மற்றும் வெயாங்கொட பகுதியைச் சேர்ந்த 71 வயதான ஆண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின்  மொத்த எண்ணிக்கை 464 ஆக உயர்வடைந்துள்ளதாக  அரசாங்க தகவல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.