கொழும்பில் நடைபாதைகளில்  சட்டவிரோதமாக வர்த்தகத்தில் ஈடுபடும் வர்த்தகர்களை உடனடியாக வெளியேற்றுவதற்கு கொழும்பு மாநாகர சபை அதிகாரிகளுக்கு உள்ளுராட்சி மன்றம் மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதன்படி கொழும்பில் மொத்தமாக 1158 பேர் இவ்வாறு நடைபாதைகளில் சட்டவிரோதமாக வர்த்தகத்தில் ஈடுபட்டு வருவது தெரியவந்துள்ளது.

இதில் கொழும்பின் புறக்கோட்டையில், ஹொல்கொட் மாவத்தை, மல்வத்த பாதை, முதலாம் குறுக்குத்தெரு, இரண்டாம் குறுக்குத்தெரு மற்றும் மூன்றாம் குறுக்குத்தெரு போன்ற பகுதிகளில் மாத்திரம் 699 பேர் இவ்வாறு சட்டவிரோதமாக வர்த்தகத்தில் ஈடுபட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.