(செ.தேன்மொழி)

முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அனுரசேனாநாயக்க  இன்று பிற்பகல் தனது இல்லத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்துமாறு அனுர சேனாநாயக்க கோரிக்கை - GTN

முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அனுரசேனாநாயக்க சுகயீனமுற்றிருந்த நிலையில் இன்று பிற்பகல் அவரது இல்லத்தில் வைத்து உயிரிழந்துள்ளார். 

நீண்ட நாட்களாக சுகயீனமுற்றிருந்த அவர் தனது 68 ஆவது வயதில் இவ்வாறு  மரணித்துள்ளார். அவரது பூதவுடல் இலக்கம் 53, மாதின்னாகொட வீதி, ராஜகிரியவில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

1953 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 7 ஆம் திகதி பிறந்துள்ள இவர் , மாத்தறையில் தனது பாடசாலை கல்வியை பூர்த்திச் செய்துக் கொண்டுள்ளார்.

1973 ஆத் ஆண்டு அக்டோபர் மாதம் 15 ஆம் திகதி உப பொலிஸ் பரிசோதகராக பொலிஸ் சேவையில் இணைந்துக் கொண்ட இவர் , பொலிஸ் பிரிவில் வழங்கப்படும் பல உயர்நிலை பதவிகளையும் வகித்துள்ளார். 

இவர் தனது சேவையில் ஓய்வுப் பெறும் போது சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராகவே செயற்பட்டிருந்தார்.