தாய்லாந்தின் தெற்கு பகுதியில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பில் நால்வர் பலியாகியுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ஹுவா ஹின் என்ற விடுதி 24 மணி நேரத்திற்குள் இராண்டாவது முறையாக மீண்டும் குண்டுத் தாக்குதலுக்குள்ளானது.

சுற்றுலாப் பயணிகள் அதிகமாக செல்லும் புக்கட் தீவிலும், சூரத் தானி மற்றும் ட்ராங் போன்ற நகரங்களிலும்  குறித்த குண்டு வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த தொடர் தாக்குதல்களில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இந்த தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ள தாய்லாந்து இராணுவ ஆட்சியின் தலைவரான பிரயூத் சன்-ஒ-சா , இது நாட்டில் கலவரம் மற்றும் குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சி என தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.