சட்டக்கல்லூரி மாணவன் தாக்கப்பட்டமை தொடர்பில் விசேட விசாரணை - பிரதி பொலிஸ்மா அதிபர்

26 Feb, 2021 | 05:20 PM
image

(செ.தேன்மொழி)

பேலியகொட பொலிஸாரால் சட்டக்கல்லூரி மாணவன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மேல் மாகாணத்தின் வட பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் தலைமையில் விசேட விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது ,

குறித்த மாணவன் றாகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். 

மேற்படி சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் உத்தியோகத்தர்களின் பணி  இடைநிறுத்தம் செய்யுமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத்வீரசேகர பொலிஸ்மா அதிபருக்கு ஆலோசனை வழங்கியிருந்தார்.

இது தொடர்பில் கவனம் செலுத்திய பொலிஸ்மா அதிபர், மேல் மாகாணத்தின் வடக்கு பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபரின் கீழ் பொலிஸ் விசேட விசாரணை பிரிவை விசாரணைகளை முன்னெடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், பொலிஸ் பரிசோதகர் ஒருவரும் 3 பொலிஸ் கான்ஸ்டபிள்களும் இவ்வாறு பணி நித்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11