(நா.தனுஜா)

வெளிவிவகார உறவுகளைப் பொறுத்தவரையில், இது இலங்கைக்கு மிகமுக்கியமான வாரமாகும் என்று முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய சுட்டிக்காட்டியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவில் மேலும் கூறியிருப்பதாவது:

இலங்கையின் வெளிவிவகார உறவுகளைப் பொறுத்தவரை, இது மிகவும் முக்கியமான வாரமாகும். ஒரு நாடு என்ற வகையில் முன்நோக்கிச் செல்வது குறித்த பேச்சுவார்த்தைகளின் போது நாட்டின் இறையாண்மையை சமரசத்திற்கு உட்படுத்த முடியாது. 

எனினும் கௌரவமான நாடொன்றின் பொறுப்புவாய்ந்த பிரஜைகள் என்ற அடிப்படையில் ஏற்கனவே ஏற்றுக்கொள்ளப்பட்ட கடப்பாடுகளை நிறைவேற்றுவதிலும் தண்டனைகளிலிருந்து விலகுவதை முடிவிற்குக் கொண்டுவருவதிலும் முனைப்புடன் செயற்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.