(எம்.நியூட்டன்)

யாழ்ப்பாணத்தில் முககவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியினை பின்பற்றாமை போன்ற குற்றச்செயல்களுடன் தொடர்புபட்டு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் ஆறு பேருக்கு தலா 1,000 ரூபா அபராதத்தை மல்லாகம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.ஆனந்தராஜா விதித்தார்.

அத்துடன் விசேடதேவை உடைய ஒருவருக்கு அவரது நிலையினை அவதானித்த நீதிவான் 500 ரூபா அபராதம் விதித்தார்.

மானிப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு தனித்தனியாக வழக்கு பதிவு செய்யப்பட்ட போதே நீதிவான் இவ்வாறு அவர்களை எச்சரிக்கை செய்தது அபராதமும் விதித்தார்.