(எம்.மனோசித்ரா)

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் புதிய நிர்வாகக்குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொழும்பு காலி முகத்திடல் ஹோட்டலில் சுதந்திர கட்சி தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று வியாழக்கிழமை நிறைவேற்றுகுழுகூட்டம் நடைபெற்றது.

இதன் போதே நிர்வாகக் குழு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

அதற்கமைய கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்தோடு சிரேஷ்ட உப தலைவர்களாக நிமல் சிறிபால டி சில்வா, பேராசிரியர் றோஹண லக்ஷ்மன் பியதாச மற்றும் மஹிந்த அமரவீர ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

உப தலைவர்களாக ஷான் விஜேலால் டி சில்வா, ரஞ்சித் சியம்பலாபிட்டி, திலங்க சுமதிபால , லக்ஷ்மன் வசந்த பெரேரா, சாமர சம்பத் தசநாயக்க, ஜீவன் குமாரதுங்க, பைசர் முஸ்தபா, ஹேமலால் குணசேகர, தயாசிறித திசேரா மற்றும் எதிரிவீர வீரவர்தன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பொதுச் செயலாளராக இம்முறையும் தயாசிறி ஜயசேகரவே நியமிக்கப்பட்டுள்ள அதே வேளை , பொருளாலராக இம்முறையும் லசந்த அழகியவண்ண நியமிக்கப்பட்டுள்ளார். அத்தோடு துமிந்த திஸாநாயக்க தேசிய அமைப்பாளராகவே இம்முறையும் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.