பப்புவா நியூ கினியாவின் முதல் பிரதமர் மைக்கேல் சோமரே 84 வயதில் காலமானதாக அவரது புதல்வி வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தியுள்ளார்.

"தேசத்தின் தந்தை" என்று அழைக்கப்படும் சோமரே 1975 இல் அவுஸ்திரேலியாவிலிருந்து சுதந்திரத்திற்கு பசிபிக் தீவுக்கூட்டத்தை வழிநடத்தி நான்கு முறை பிரதமராக பணியாற்றினார்.

பெப்ரவரி தொடக்கத்தில் அவருக்கு கணைய புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது என்று அவரது புதல்வி பெத்தா சோமரே ஒரு அறிக்கையில் கூறியுள்ளார்.

பல பப்புவா நியூ கினியர்கள் தங்கள் தந்தையை தங்கள் சொந்த "தந்தை மற்றும் தாத்தா" என்று ஏற்றுக்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சுதந்திரத்திற்கு முன்னர், சோமரே அவுஸ்திரேலிய நிர்வாகத்தின் கீழ் பப்புவா நியூ கினியாவுக்கான முதல்வராகவும் இருந்தார்.