ஆரம்பித்த வேகத்திலேயே நிறைவுக்கு வந்த இங்கிலாந்து - இந்திய அணிக்கிடையேயான மூன்றாவது டெஸ்ட்

Published By: Vishnu

26 Feb, 2021 | 10:19 AM
image

இங்கிலாந்துக்கு எதிராக ஆமதாபாத்தில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இரண்டே நாளில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பதிவுசெய்தது.

இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்சமயம் விளையாடி வருகிறது.

முதல் இரு டெஸ்டில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற, தொடர் 1–1 என சமனிலையில் இருந்தது. இந் நிலைியல் இரு அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி ஆமதாபாத்தில் உள்ள உலகின் பெரிய மைதானமான நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று முன்தினம் ஆரம்பமானது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சுக்காக 112 ஓட்டங்களை எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதன் பின்னர் பதிலுக்க துடுப்பெடுத்தாடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 99 ஓட்டங்களை எடுத்திருந்தபோது முதல் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்தது.

இந் நிலையில் நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டம் ஆரம்பிக்க 13 ஓட்டங்களினால் பின்தங்கியிருந்த இந்தியா மொத்தமாக 53.2 ஓவர்களை எதிர்கொண்டு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 145 ஓட்டங்களை பெற்றது.

இதனால் இங்கிலாந்து அணி முதல் இன்னங்சின் முடிவில் 33 ஓட்டங்களினால் பின் தங்கியது.

அதன் பின்னர் இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த இங்கிலாந்து அணி மீண்டும் இந்தியாவின் ‘சுழல்’ சூறாவளியில் சிக்கியது. 

அக்சர் படேல் வீசிய முதல் ஓவரின் முதல் பந்தில் கிராலே (0) போல்டானார். மூன்றாவது பந்தில் பெயர்ஸ்டோவ் (0) போல்டாக, ஓட்ட கணக்கை துவக்கும் முன் 2 விக்கெட்டுகளை இழந்தது. 

அதன் பின்னர் சிப்லேயும் (7), அக்சர் ‘சுழலில்’ சிக்கினார். வழக்கம் போல ஸ்டோக்சை (25) பெவிலியனுக்கு அனுப்பினார் அஷ்வின். அக்சரிடம் ஜோ ரூட் (19) வீழ்ந்தார்.  ஆர்ச்சரை(0) ஆட்டமிழக்கச் செய்தார் அஷ்வின். அந்த ஆட்டமிழப்பினால் டெஸ்ட் அரங்கில் 400 ஆவது விக்கெட் என்ற மைல்கல்லையும் அஷ்வின் எட்டினார். 

போக்சை (8) வெளியேற்றிய அக்சர், தனது 5 ஆவது விக்கெட்டை பெற்றார். இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 81 ஓட்டங்களுக்கு சுருண்டது. 

இந்திய அணி சார்பில் அக்சர் 5 விக்கெட்டுகளையும் அஷ்வின் 4 விக்கெட்டுகளையும் வொஷிங்டன் சுந்தர் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

பின்னர் 49 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 7.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி வெற்றியிலக்கை அடைந்தது.

ரோகித் சர்மா 25 ஓட்டங்களுடனும், சுப்மான் கில் 15 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

இந்த வெற்றியின் மூலம் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2:1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

71 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டாவது நாளிலேயே முடிவுக்கு வந்த டெஸ்ட் போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டியின் ஆட்டநாயனாக அக்சர் படேல் தெரிவானார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31
news-image

சீன கால்பந்தாட்டச் சங்கத்தின் முன்னாள் தலைவருக்கு...

2024-03-26 11:53:22
news-image

ஐ.பி.எல் 2024 : பஞ்சாப் கிங்ஸை...

2024-03-26 00:02:20