யாழ்ப்பாணப் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவின் ஆறாவது அமர்வின் போது கலாசார கற்கைகள் முதுகலைமாணி பட்டத்தை மாற்றுத் திறனாளி மாணவன் ஒருவருக்கு நேற்று வழங்கிய தருணத்தில், யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா முழந்தாழிட்டு, அம் மாணவனின் உச்சி முகர்ந்து வழங்கிமை அவையில் இருந்த அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது.