நேற்றைய தினம் மட்டக்களப்பு பதுளை வீதி கித்துள் கிராமத்தில் மண் மாபியாக்களுக்குள் இடம்பெற்ற கலவரம் காரணமாக 23 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் வாள் வெட்டுக்கு இலக்காகி அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சுமார் முற்பகல் 11.00 மணியளவில் இரு மண் மாபியாக்கள் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வாள் வெட்டில் முடிந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த காலங்களாக மண் மாபியாக்களுக்கு இடையில் பல பிரச்சினைகள் ஏற்பட்டிருந்த போதிலும் குறிப்பாக சட்டவிரோதமான முறையில் மண் அகழ்வு அதிகளவாக ஈடுபடுகின்ற மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் காணப்படுகின்றது. 

ஆகவே இதுபோன்ற வாள் வெட்டு சம்பவம் பதிவாகி உள்ளது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

வாள் வெட்டுக்கு இலக்காகிய இளைஞன் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரனைகளை கரடியனாறு பொலிஸார் மேற்க்கொள்ளுகின்றமை குறிப்பிடத்தக்கது.