தொழில்வாய்புகளுக்காக ஓமானுக்கு சென்று, அங்கு பல்வேறு அசெளகரியங்களை எதிர்கொண்ட 315 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.

அதன்படி ஓமானின் மஸ்கட்டிலிருந்து இரு விமானங்களின் மூலமாக அவர்கள் நேற்று மாலை நாட்டை வந்தடைந்துள்ளனர்.

வெளிநாடுகளிலில் உள்ள இலங்கையர்களை திருப்பி அனுப்பும் திட்டத்தின் கீழ் இவர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

188 இலங்கையர்களுடன் முதல் விமானம் நேற்று மாலை 4.45 மணியளவிலும் 127 இலங்கையர்களுடன் இரண்டாவது விமானம் நேற்று மாலை 5.15 மணியளவிலும் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

விமான நிலையத்தை வந்தடைந்த அனைத்து பயணிகளும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்காக இலங்கை இராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்பட்டனர்.