மொஸ்கோ சிறையிலிருந்து அடையாளம் தெரியாத சிறைக்கு மாற்றப்பட்டார் நவல்னி

Published By: Vishnu

26 Feb, 2021 | 09:26 AM
image

சிறையில் அடைக்கப்பட்ட ரஷ்ய எதிர்க்கட்சி அரசியல்வாதி அலெக்ஸி நவல்னி மொஸ்கோவிற்கு வெளியே ஒரு அடையாளம் தெரியாத தடுப்பு நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.

இது சிறை முகாமாக இருக்கலாம் என்று அவரது வழக்கறிஞரும் உரிமை அமைப்பின் உறுப்பினரும் தெரிவித்துள்ளனர். 

ஜனாதிபதி விளாடிமிர் புடினின் முக்கிய விமர்சகரான நவல்னி, இந்த மாத தொடக்கத்தில் பரோல் மீறல் குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டார். அரசியல் காரணங்களுக்காக அவர் பழிவாங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ஐரோப்பிய மனித உரிமைகள் ரஷ்ய நீதிமன்றின் இத் தீர்ப்பானது சட்டவிரோதமானது என்று கூறி விமர்சித்துள்ளதுடன், காவலில் இருக்கும் நவல்னியின் உயிருக்கு ஆபத்துக்கள் இருப்பதைக் காரணம் காட்டி, அவரை விடுவிக்க ரஷ்ய அரசாங்கத்திற்கு உத்தரவிட்டது.

எனினும் அந்த கோரிக்கையை ரஷ்யா மறுத்துவிட்டது. 

நவல்னிக்கு விதிக்கப்பட்டுள்ள தீர்ப்பின்படி அவர் இன்னும் இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக தடுப்புக்காவலில் இருக்க நேரிடும் என்று அவரது வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.

அவரது வழக்கறிஞர்களில் ஒருவரான வாடிம் கோப்ஸேவ் டுவிட்டரில், நவல்னி மொஸ்கோ சிறையிலிருந்து மாற்றப்பட்டதாகக் கூறினார், பின்னர் நவல்னியை அடையாளம் தெரியாத சிறை முகாமுக்கு அழைத்துச் சென்றிருக்கலாம் என்றும் கூறினார்.

44 வயதான நவல்னி, ஜேர்மனியில் இருந்து திரும்பிய பின்னர், மேற்கத்திய புலனாய்வு அமைப்புகளுடன் ஒத்துழைப்பதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு ஜனவரி 17 ஆம் திகதி கைது செய்யப்பட்டார், 

நவல்னியின் கைது எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களைத் தூண்டியது, ரஷ்யா முழுவதும் பல்லாயிரக்கணக்கானவர்களை வீதிகளில் இறக்கியது.

அதிகாரிகள் சுமார் 11,000 பேரை தடுத்து வைத்தனர். அவர்களில் பலருக்கு ஏழு முதல் 15 நாட்கள் வரை அபராதம் அல்லது சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

நவல்னியின் தடுப்புக்காவல் ரஷ்ய அதிகாரிகளுக்கு எதிராக கூடுதல் பொருளாதாரத் தடைகளைத் தயாரிக்கும் மொஸ்கோவிற்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையில் அரசியல் பதட்டங்களை எழுப்பியமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17