முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டுக்காக கைதுசெய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,242 ஆக உயர்வடைந்துள்ளது.

இது தொடர்பான குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் ஒன்பது பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை அவசியம் சுகாதார ஆலோசனைகளை பின்பற்றுமாறு அறிவித்துள்ள பொலிஸார், பெரிய குழுக்களாக ஒன்று கூடுவதைத் தடுக்கவும், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய குழுக்களுக்குள் இருக்கும் நபர்களுக்கு நடவடிக்கைகளை மட்டுப்படுத்தவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.