(ஆர்.யசி)

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை நிராகரிப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன்  முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்து ஆராய ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சட்டத்தரணிகள் குழாம் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களின் அறிக்கை கையளிக்கப்பட்டதும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினால் உத்தியோகபூர்வ அறிவிப்பு விடப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தெரிவிக்கின்றது.

ஈஸ்டர் தாக்குதல் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை நேற்று முன்தினம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த தாக்குதலுக்கு பொறுப்பு கூறவேண்டியவர்களின் பட்டியலில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக குற்றவியல் நடவடிக்கையை எடுக்குமாறு பரிந்துரைத்துள்ளது. 

இது குறித்து ஆராயவும் விதமாகவும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்கவும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு நேற்று பிற்பகல் கூடியது.

 முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கூடிய இந்த கூட்டத்தில், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை நிராகரிப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல், சுதந்திரக் கட்சி, SLFP