கொரோனா தொற்றினால் உயிரிழப்போரின் உடல்களை அடக்கம் செய்வதற்கு அனுமதியளிக்கும் வகையிலான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.

கொரோனா  தொற்றால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.

நாட்டில் கொரோனா  தொற்றால் உயிரிழக்கும் மக்களின் உடல்களை அடக்கம் செய்ய ஒப்புதல் அளிக்கும் வர்த்தமானி அறிவிப்பை சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி தெரிவித்ததாக  அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்திருந்தார். 

கொரோனா தொற்றால் மரணிப்போரின் சடலங்களை அடக்கம் செய்ய தொழில்நுட்ப நிபுணர்கள் குழு அனுமதியளித்துள்ள நிலையிலேயே வர்த்தமானி இன்று இரவு வெளியாகியுள்ளது.