கொரோனா  தொற்றால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் அரச அச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் கொரோனா  தொற்றால் உயிரிழக்கும் மக்களின் உடல்களை அடக்கம் செய்ய ஒப்புதல் அளிக்கும் வர்த்தமானி அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி தங்களுக்கு தகவல் அளித்துள்ளதாக அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றால் மரணிப்போரின் சடலங்களை அடக்கம் செய்ய தொழில்நுட்ப நிபுணர்கள் குழு அனுமதியளித்துள்ள நிலையிலேயே வர்த்தமானி இன்று இரவு வெளியாகவுள்ளது. 

இந்நிலையில் குறித்த வர்த்தமானி அச்சிடுவதற்காக அரச அச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.