சமூக ஊடக நிறுவனமான பேஸ்புக் மியன்மாரின் இராணுவத்தையும் அதன் துணை நிறுவனங்களையும் அதன் தளங்களில் இருந்து தடை செய்துள்ளது.

மியான்மர் இராணுவம் (டட்மெடேவ்) மற்றும் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள அரசு ஊடகங்கள் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமை பயன்படுத்துவதையும், இராணுவத்துடன் தொடர்புடைய வணிக நிறுவனங்களின் விளம்பரங்களுக்கும்  தடை செய்கிறோம்.

பெப்ரவரி முதலாம்  திகதி  இராணுவத்தினர் ஆட்சியைக் கைப்பற்றியதன் பின்னர், கொடிய வன்முறை உட்பட நிகழ்வுகள் இந்த தடைக்கான தேவையை விரைவுபடுத்தியுள்ளன, " என  பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பர்மா எனவும் அழைக்கப்படும் மியன்மாரில் பெப்ரவரி முதலாம்  திகதி  இராணுவத்தினர் ஆட்சியைக் கைப்பற்றியதுடன், அரசு ஆலோசகர் ஆங் சான் சூகி ஜனாதிபதி வின் மியின்ட் உட்பட அரசியல் தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஒரு வருட கால அவசரகால நிலையை அறிவித்துள்ளது.

இணைய சேவைகளும் இராணுவ ஆட்சியாளர்களால் முடக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இராணுவப் புரட்சிக்கு எதிராக மக்கள் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

மியன்மார் இராணுவப் புரட்சிக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் இருவர் கொல்லப்பட்டமைக்கு மறுநாள் மியன்மார் இராணுவத்தால் நடத்தப்படும் பேஸ்புக் செய்திப் பக்கத்தை பேஸ்புக் நிறுவனம் ஏற்கனவே நீக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.