பதுளை மாவட்டத்தின் மகியங்கனை அரசினர் வைத்தியசாலை வளாகத்தில் கொரோனா தொற்றாளர்களுக்கான சிகிச்சை நிலையமொன்றினை ஆரம்பிக்க துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டள்ளதாக, ஊவா மாகாண சுகாதார சேவைப் பணிப்பாளர் ஜனிதா தென்னக்கோன் தெரிவித்தார்.

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை மேற்கொண்டால் செலவை அரசே  ஏற்கும்”-புதுச்சேரி முதல்வர் அறிவிப்பு!

ஊவா மாகா சுகாதார சேவை பணிப்பாளர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில், மாகாண சுகாதார சேவைப் பணிப்பாளர் கலந்துகொண்ட போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், 

மேற்படி கோவிட் 19 தொற்றாளர்களுக்கான சிகிச்சை நிலையம், அனைத்து வசதிகளுடனான தீவிர சிகிச்சை நிலையமாகவும், நோயாளர்கள் தங்கி சிகிச்சை பெற்றுக் கொள்ளும் வகையிலும் அமைக்கப்படும்.

அந்த வகையில், குறித்த சிகிச்சை நிலையம் ஏற்கனவே அமைக்கப்பட்டிருப்புமேயாகில், கடந்த 17 ஆம் திகதி ஆடைத்தொழிற்சாலையில் கடமையாற்றிய இளம் பெண்ணை சுகமாக்கியிருக்கலாம்.

குறித்த பெண்ணின் மரணத்தையடுத்தே, கோவிட் 19 தொற்றாளர்களுக்கான சகல வசதிகளுடன் கூடிய சிகிச்சை நிலையத்தை அமைக்க வேண்டுமென்ற நிலை ஏற்பட்டது.

மகியங்கனைப் பகுதியில் 750 க்கும் மேற்பட்டோருக்கு கோவிட் 19 தொற்று உறுதியாகியிருப்பதும், கோவிட் 19 தொற்றாளர்களுக்கான சிகிச்சை நிலையம் அமைக்கவும் காரணமாகியுள்ளது.

இந்த சிகிச்சை நிலையம் விரைவில் ஆரம்பிக்க அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளேன், எனக் குறிப்பிட்டுள்ளார்.