மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப் பகுதியும், அம்பாறை மாவட்டத்திற்குட்பட்ட உகன பிரதேசத்திற்குட்பட்ட கலப்பிட்டிகல எனும் கிராமத்திற்குள் இன்று வியாழக்கிழமை(25) அதிகாலை புகுந்த காட்டுயானைகள் அங்கிருந்த பயன்தரும் பல மரங்களையும், தோட்டங்களையும் அழித்துத் துவம்சம் செய்துள்ளதாக பிரதேச வாசிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
இன்று அதிகாலை சுமார் 1.30 மணியளவில் இவ்வாறு புகுந்த காட்டுயானைக் கூட்டத்தினால் அக்கிராம மக்கள் மிகுந்த அல்லோல கல்லோலப்பட்டுள்ளனர்.
கிராமத்திற்குள் காட்டுயானைக்கூட்டம் புகுந்ததை அவதானித்த மக்கள் நள்ளிரவு வேளையில் மிகுந்த அச்சத்துடன் யானைக்கூட்டத்தை அப்புறப்படுத்த முயற்சி செத்துள்ளனர்.
எனினும் அங்கிருந்த பயன்தரும், வேளாண்மை, தென்னை, வாழை, பலா, மா, மரவெள்ளி உள்ளிட்ட தோட்டங்களை அழித்து துவம்சம் செய்துவிட்டு ஒருவாறு யானைக்கூட்டம் வெளியேறியுள்ளது.
அண்மைக்காலமாக மட்டக்களப்பு, மற்றும் அம்பாறை மவாட்டங்களின் எல்லைப் புறங்களில் இவ்வாறு காட்டு யானைகளின் அட்டகாசங்களும், தொல்லைகளும் அதிகரித்த வண்ணமுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM