Published by T. Saranya on 2021-02-25 17:05:02
அமெரிக்காவில் பட்டினியை போக்க வீதிகளில் வண்ணமயமான குளிர்சாதன பெட்டிகள் வைக்கப்பட்டு வருகிறது.

கடந்த 2020 ஆம் ஆண்டில் 5 கோடிக்கும் அதிகமான மக்கள் பட்டினியை அனுபவித்துள்ளனர். இதற்கு முந்தை ஆண்டில் இது 35 மில்லியனாக இருந்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் நிர்வாகம் உணவு நெருக்கடியை தீர்க்க நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில், தேவையானவர்களுக்கு உணவளிக்க புதிய வழிகளைக்கொண்டு சமூகங்கள் இடைவெளியை நிரப்புகின்றன.