பிக்பாஸ் 4 வது சீசன் கொரோனா காரணமாக ஒக்டோபர் 4 ம் திகதி தொடங்கியமை யாவரும் அறிந்ததே. பின் 100 நாட்கள் கடந்து நிகழ்ச்சி ஜனவரி 17ம் திகதி பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது.

இந்த சீசனின் வெற்றியாளராக ஆரி தெரிவானார். இப்போது தானே 4வது சீசன் முடிவடைந்தது எனவே 5வது சீசன் தாமதமாகவே ஆரம்பமாகும் என ரசிகர்கள் நினைக்கிறார்கள்.

ஆனால்  பிக்பாஸ் 5வது சீசன் வரும் ஜுன் மாதமே ஆரம்பமாகவுள்ளதுடன், அதற்கான வேலைகளை தயாரிப்பு குழு ஆரம்பித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

அதோடு இந்த சீசனையும் நடிகர் கமல்ஹாசனே தொகுத்து வழங்குவார் என கூறப்படுகிறது.