அம்பாறை பொத்துவில்லில் இருந்து பதின்ம வயது  சிறுமியை அழைத்து வந்து முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் குடும்பம் நடத்தி வந்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அம்பாறை மாவட்டம் பொத்துவில் கிராமத்தில் வசித்து வரும் இளைஞன் ஒருவன் தன் காதலியான 14வயது சிறுமியை அழைத்துக்கொண்டு முல்லைத்தீவு சிலாவத்தை மாதிரிகிராம பகுதியில் குடும்பம் நடத்தியுள்ளார்.

குறித்த சிறுமியினை காணவில்லை என பெற்றோர் அம்பாறை பொத்துவில் பகுதி பொலிசாருக்கு முறைப்பாடு செய்ததையடுத்து பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய குறித்த சிறுமியுடன் குடும்பம் நடத்திய இளைஞனையும் சிறுமியையும் கைது செய்துள்ளனர்.